Friday, December 18, 2009

சரம்

சரம் என்பது மூச்சு ஓட்டம். ஒரு நாழிகைக்கு (24 நிமிஷம்) 360 சரவோட்டம் நடைபெறும். இப்படி ஒரு நாளைக்கு 21,600 முறை நடைபெறும். 5 நாழிகைக்கு (2 மணி) ஒரு முறை சரம் மாறும். திருமூலர் எந்தெந்த நாட்களில் எந்தெந்த கலைகளில் சரவோட்டம் நடைபெறும் எனக் குறித்துள்ளார்.

'வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே' - திருமந்திரம் 770.

திங்கள், புதன், வெள்ளி - இடம்
செவ்வாய், சனி, ஞாயிறு - வலம்
வியாழன் (வளர்பிறை) - இடம்
வியாழன் (தேய்பிறை) - வலம்.

'இடகலை, அல்லது பிங்கலையில் ஓர் இரவு முழுவதும் சுவாசம் இடைவிடாமல் நடந்தால் அம்மனிதன் மூன்று வருடங்களில் மரணமடைவான். பிங்கலையில் மாறுதல் இல்லாமல் இரண்டு இரவு இரண்டுபகல் இடைவிடாமல் நடந்தால் அவன் இரண்டு ஆண்டுகளில் மரணமடைவான். இடைவிடாமல் சுவாசம் ஒரு நாசியில் மூன்று நாளைக்கு நடக்குமானால் ஒரு ஆண்டில் மரணமடைவான். இரவு முழுதும் இடகலையிலும், பகல் முழுவதிலும் பிங்கலையிலும் இடைவிடாமல் நடந்தால் ஆறு மாதத்தில் மரணமடைவான். பிங்கலையே தொடர்ச்சியாக இடைவிடாமல் நடந்தால் 15 நாளில் மரணமடைவான். இவ்வாறு சிவயோகசாரம் என்னும் நூல் கூறுகிறது.

http://suryakannan.blogspot.com

No comments:

Post a Comment